P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

ஜனாதிபதி நிதியுதவி உங்கள் அருகிலேயே

ஜனாதிபதி நிதியத்தின் புதிய செயல் முறைக்கேற்ப புதிய அமைப்பினை அறிமுகப்படுத்தியதற்கு பின்னரான முதல் மருத்துவ உதவித்தொகை இன்று (2025.03.14) வழங்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும் மருத்துவ உதவித் திட்டம் 2025.02.07 முதல் பிரதேச மட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் பொதுமக்கள் தங்களது பிரதேச செயலாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பிக்க வசதி பெற்றுள்ளனர்.
இதற்கமைவாக, 2025.02.21 அன்று மாத்தறை மாவட்டத்திலுள்ள பஸ்கொட பிரதேச செயலாளர் அலுவலகம் மூலம் கணினி அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உரிய கட்டணங்கள் இன்று பஸ்‌கொட பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

Top