இல்லை. நோயாளி சார்பில் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் வேறு உறுப்பினர் ஒருவர் இல்லாவிடின் கிட்டிய உறவினர் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
அலுவலகம் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ளது. (கூடிய விபரங்களுக்காக வெப் தளத்தில் உள்ளடங்கியூள்ள வரைபடத்தைப் பார்க்கவூம்).
வாரத்தின் வேலைசெய்யூம் எந்த நாளிலும் மு.ப.8.30 – 4.15 இற்கும் இடையில்.
சத்திர சிகிச்சை / சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவசாலையிலிருந்து வெளியேறிய தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். (வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்கள் உள்ளடங்கலாக)
காசோலையானது நோயாளியின் பெயரில் வழங்கப்படுவதுடன் அது பதிவூத்தபாலில் நோயாளியின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
முடியாது. நிதியூதவி வழங்கப்படுவதானது முக்கியமாகப் பின்வரும் நோய்களுக்காகும்.
(நிதியூதவி வழங்கப்படும் நோய்கள்)
சத்திரசிகிச்சை / சிகிச்சை பெறுவதற்கு முன்னர் அதற்காக அதிமேதகு சனாதிபதி அவர்களின் அங்கீகாரம் கிடைத்தால் மருத்துவசாலைக்கு அனுமதிக்கும் திகதியை சனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பித்ததன் பின்னர் வகைகூறல் கடிதம் மருத்துவசாலைக்கு அல்லது உபகரணங்களை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைகளுக்கான வகைகூறல் கடிதம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னராகவூம் மற்றைய நோயாளிகளின் சத்திரசிகிச்சைகளுக்கான வகைகூறல் கடிதத்தை 10 நாட்களுக்கு முன்னராகவூம் பெற்றுக் கொள்ளலாம்.
காசோலைகள் வழங்கப்படுவதானது காத்திருப்போர் பட்டியலில் நோயாளிகளின் பதியப்படும் ஒழுங்கின் அடிப்படையிலேயே இடம்பெறும். எவ்வாறாயினும் இக்காலப் பகுதி 3-5 நாட்கள் ஆகலாம்.
பிரதேச மாவட்டச் செயலாளரின் சிபார்சுடன் கூடிய விபரமானதொரு அறிக்கை பெற்றுக்கொண்டதன்பின் தீர்மானிக்கப்படும்.