பின்வரும் நியதி நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கைப் பிரசைகள் மட்டும் நிதியுதவிக்காக விண்ணப்பிக்கலாம்
- சத்திரசிகிச்சை /வைத்தியசிகிச்சை மேற்கொண்டவராயின், நோயாளி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் (சகல அரச விடுமுறை நாட்களும் வார இறுதி நாட்களும் உட்பட) விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்கப்படவேண்டும்.
- நோயாளி/வாழ்க்கைத் துணைவர் மற்றும் விவாகமாகாத பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தின் மாதாந்த வருமான எல்லை 200,000. 00 வை விஞ்சாதிருத்தல். (2024.01.01 ஆந் திகதிக்குப் பின்னர).
- நோயாளி, வாழ்க்கைத் துணைவர் மற்றும் விவாகமாகாத பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினரொருவர் வருமான வரி செலுத்துதலுக்கு உட்படாதிருத்தல்
- சத்திரசிகிச்சை /சிகிச்சைக்காகச் செலவாகும் மொத்தச் செலவில் 50%மான தொகையை வேறேதேனும் நிறுவனமொன்றிலிருந்து பெறுவதற்குத் தகைமையற்றவராக இருத்தல் (காப்புறுதியொன்றிலிருந்து / மருத்துவ உதவி முறைமையிலிருந்து / நலன்புரி நிறுவனங்களிலிருந்து)
- பிரதேச செயலாளரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ளல்
- சத்திரசிகிச்சைக்காக / சிகிச்சைக்காக ஆகும் செலவை ஈடுசெய்வதற்குப் போதியளவு நிதிவளங்களை நோயாளியின் குடும்பம் கொண்டிராமை
- உரிய சத்திரசிகிச்சை/ சிகிச்சை சனாதிபதி நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவசாலையொன்றின் மூலம் மேற்கொள்ளப் பட்டிருத்தல்
- சனாதிபதி நிதியத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவி வழங்கப்படும் நோயாக இருத்தல்
- சனாதிபதி நிதியத்தின் அங்கீகரிக்கப்பட்ட உச்சகட்ட நிதியுதவிகளைப் பெற்றிரமை
- விண்ணப்பப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை வழங்காதிருத்தல்