P R E S I D E N T S F U N D
  • info@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

அறிமுகம்

சனாதிபதி நிதியமானது 1978 ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்தால் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட நிறுவனமாகும். அப்போதைய சனாதிபதி ஜே.ஆர்.ஐயவர்த்தன அவர்களின் பதவியேற்பை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆரம்ப வைபவத்தின்போது பொதுநலவிரும்பிகளின் நிதிசார் பங்களிப்புடன் ரூபா 237,120/- க்கொண்ட ஆரம்ப மூலதனத்தினால் சனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இது சனாதிபதியின் நிதியம் எனக் குறிக்கப்படுவதுடன் முகாமைசெய்து சட்ட ஏற்பாடுகளுக்கமையச் செயற்படுவதற்காக அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு சட்டத்தால் அதிகாரமளிக்கப்படுகின்றது. அரசின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வருடாந்தம் சனாதிபதி நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வு செய்யப்படும்.

குறிக்கோள்கள்

  • வறுமை ஒழிப்பு.
  • கல்வி அல்லது ஞானத்தின் வளர்ச்சி.
  • மதங்களின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்தல்.
  • நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கல்.
  • ஜனாதிபதி மற்றும் ஆட்சிமன்றக்குழு குழுவின் கருத்துப்படி, பொதுமக்களின் நலனுக்கான பணிகளைச் செய்தல்.

 

செயல்பாடுகள்

  • பல்வேறு நோய்களுக்கான மருத்துவ உதவி.
  • மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வறுமை ஒழிப்புத் திட்டம்.
  • மஹாபொல புலமைப்பரிசில் திட்டம்.
  • க.பொ.த (உ/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்.
  • க.பொ.த (சா/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு (உ/த) கற்பதற்காக புலமைப்பரிசில் வழங்குதல்.
  • மத சீர்திருத்தம் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மானியங்கள் வழங்குதல்.
  • ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ‘பெரஹெரா’ மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்குதல்.
  • தனிநபர்களின் நலனுக்காக ஜனாதிபதி நிதியம் என்ற பெயரில் அரசு வங்கிகள் மற்றும் பொது அறங்காவலர் திணைக்களத்தில் பராமரிக்கப்படும் கணக்குகள்.
  • ஜனாதிபதி மற்றும் செயற்குழுவின் விருப்பப்படி வழங்கப்படும் நன்மைகள்.

 

நிதி மூலங்கள்

  • அபிவிருத்தி லொத்தர்சபை.
  • பொதுமக்கள் நன்கொடைகள்.

கட்டுப்பாட்டுக் குழு

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்
மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களே
மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்
சனாதிபதியின் செயலாளர்
வணக்கத்திற்குரிய கலாநிதி மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
Top